Magna, College of Arts & Science

Magna

College of Arts & Science

Magaral, Chennai - 600 055.

10.01.2025 Pongal Celebrations

Home » 2024 - 25 » 10.01.2025 Pongal Celebrations

பொங்கல் விழா 2025

சிறப்பு விருந்தினர்: திருமிகு. தமிழ்தாசன் ஜே.எபிநேசர் அவர்கள்,

நிகழ்ச்சிச் சுருக்கம்

மேக்நா தமிழ்ப் பேரவையின் சார்பில் நம் கல்லூரியில் 11-01- 2025 அன்று பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் தமிழாசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான திருமிகு. தமிழ்தாசன் ஜே. எபிநேசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். லிங்கன் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலாவதாக வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவி விஷ்ணு பிரியா பாவேந்தரின் ‘சங்கே முழங்கு’ வரவேற்பு பாடலுக்கு நடனம் ஆடினார். தொடர்ந்து தமிழ்ப் பேரவையின் மாணவத் தலைவரான கணினி பயன்பாட்டு துறை மாணவி மெர்சி, கல்லூரியின் தலைவர், சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். கல்லூரியின் தலைவர் திருமிகு ஜே. தேவதாஸ் நாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து, தமிழ்த்துறை பேராசிரியர் பா. தாண்டவமூர்த்தி பொங்கல் கவிதையை வாசித்து, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் திருமிகு. தமிழ்தாசன் எபிநேசர் அவர்கள் தமிழ் மொழி குறித்தும் தமிழர் பண்பாடு குறித்தும் சிறப்புரை நல்கினார். தொடர்ந்து மாணவர்களிடம் தமிழ் ஆர்வம் குறைவதற்குக் காரணம் ஆசிரியர்களே! பெற்றோர்களே! என்னும் தலைப்பில் நடுவராக நெறியாள்கை செய்து, மாணவிகள் ஹேமலதா,விஷ்ணு பிரியா, கீர்த்தனா, தேஜாஸ்ரீ, ஆகியோரின் வாதங்களை ஏற்று, பட்டிமன்றம் நிகழ்த்தினார்.

அதனையடுத்து நம் கல்லூரி மாணவர்கள் மேக்நா தமிழ்ப் பேரவையின் தயாரிப்பில் உருவாக்கிய *கடன் பெற்றான் நெஞ்சம்* என்னும் குறும்படத்தை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து சங்க மகளிர் வீரத்தை உணர்த்தும், நம் கல்லூரி மாணவிகள் நடித்த மௌன மொழியாடலை திரையில் வெளியிட்டனர்.  தொடர்ந்து தமிழரின் உடை கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பண்பாட்டு நடை மாணவிகளால் நிகழ்த்தப்பட்டது.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு கிராமத்து திருவிழா சூழலில் அமைக்கப்பட்ட கல்லூரி மைதானத்தில் நிகழ்ச்சி தொடர்ந்தது ஆசிரியைகளும் மாணவிகளும் பொங்கலிட்டு ஆதவனை வழிபட்டனர். உழவு மாட்டிற்கு திலகமிட்டு, மரியாதை செய்தனர். வழிபாட்டில் கல்லூரியில் செயலாளர் திருமதி ரூபி தேவதாஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

மாணவ மாணவிகளின் நாட்டுப்புற நடனங்களும் ஜல்லிக்கட்டு குறித்த நடனங்களும் அரங்கேற்றப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் பிரமிடு காட்சியை உருவாக்கினர். உறியடி, வழுக்கு மரம், பிரியாணி சாப்பிடும் போட்டி, பானி பூரி சாப்பிடும் போட்டி , பொங்கல் பொருளை கண்டறியும் போட்டி,  வளையம் வீசி, பொருளைக் கவரும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்று கொண்டாடினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் இயக்குனர் ஜெர்ரிபிரசாந்த் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இரண்டாமாண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவி தாட்சாயணி நன்றியுரை வழங்க விழா சிறப்பாக நிறைவுற்றது.

pongal11
மஞ்சள் எனும் மங்கலத்தைக் கண்டு,மகிழ்ச்சியில் பொங்கும் பொங்கல்
pongal12
கரும்புகள் அணிவகுக்க, பொங்கல் விழாவுக்கு புறப்படும் கல்லூரியின் தலைவர், செயலாளர், இயக்குனர் மற்றும் சிறப்பு விருந்தினர்.
pongal13
வரவேற்பு நடனம்- பாவேந்தரின் சங்கே முழங்கு பாடல்.
pongal14
நிகழ்வைக் கண்டு ரசிக்கும் கல்லூரியின் தலைவர், செயலாளர், இயக்குநர் மற்றும் சிறப்பு விருந்தினர்.
pongal16
திருமிகு. தமிழ்தாசன் ஜே. எபிநேசர் அவர்களின் சிறப்புரை
pongal15
தமிழார்வத்தை மீட்டெடுக்கும் சிறப்பு பட்டிமன்றம்
pongal17
அரங்கம் அதிரும், மாணவியின் பட்டிமன்ற பேச்சு.
pongal18
பட்டிமன்ற நடுவரின் நயவுரை
pongal20
மூதின் முல்லை' மௌன மொழியாடலில் நடித்த மாணவிகள்.
pongal19
தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் மாணவிகளின் நிமிர்ந்த நன்னடை..
pongal21
கிராமத்து சூழலில் அமைக்கப்பட்ட பொங்கல் விழாக் களம்.
pongal22
ஆதவனை வணங்கும் பொங்கலோ ! பொங்கல்!
pongal24
வேளாண்மை காக்க,கதிரவனைப் போற்றி,கற்பூர ஆரத்தி எடுக்கும் கல்லூரியின் செயலாளர், திருமதி ரூபி தேவதாஸ் அவர்கள்.
pongal23
அட்டாங்க வழிபாடு செய்யும் மிக்கி மௌஸ்
pongal25
பண்பாட்டுப் படையலாய் பரிமாறிய சர்க்கரைப் பொங்கல்
pongal26
வீரத்தை வெளிப்படுத்தும் சிலம்பாட்டம்.காக்க,கதிரவனைப் போற்றி,கற்பூர ஆரத்தி எடுக்கும் கல்லூரியின் செயலாளர், திருமதி ரூபி தேவதாஸ் அவர்கள்.
pongal28
கண் சிமிட்டும் கண்ணாடி வளையல் அங்காடி.
pongal27
மாணவிகளின் துள்ளல் நடனம்
pongal29
கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்கும் மாணவிகள்
pongal30
மண் மணம் வீசும் கிராமத்து நடனம்
E6,2
நம் பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டெடுக்கும் மிட்டாய் வகைகள்
E6,1
கல்லூரிக் காளைகளின் ஜல்லிக்கட்டு நடனம்
E6,2
இளம் காளைகளின் ஆட்டத்தை ரசிக்கும் கல்லூரி மயில்கள்.
E6,2
கடைவீதியில் காட்சிப்படுத்தப்பட்ட ,பஞ்சு மிட்டாய் பாப்கான்
E6,1
பிரமிடு எழுப்பி சூரியனுக்கு வணக்கம் சொல்லும் சூரர்கள்
E6,2
மலையென செம்மாந்து நிற்கும் மாணவர்களின் பிரமிடு.
E6,2
வீர சாகசங்களை கண்டு வியக்கும் மாணவிகள்
E6,1
'தின்றுமகிழ்வோம்' மாணவ மாணவிகளின் உற்சாகம் பொங்கும் உணவுப் (பிரியாணி) போட்டி
E6,2
பட்டையைக் கிளப்பிய பானி பூரி போட்டி.
E6,2
'குறி வச்சா பரிசு விழணும்' வளையம் வீசும் போட்டி
E6,1
பாயும் புலிகளின் ஆட்டம்
E6,2
முயற்சியை முன்னெடுக்கும் உறியடி
E6,2
விடாமுயற்சியை வலியுறுத்தும் வழுக்கு மரம்
E6,1
மகிழ்ச்சியின் முத்தாய்பாய் பரிசு மழை.